ஜேசன் சஞ்சய் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது வெளியாகியுள்ள ஒரு வைரல் வீடியோ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கடந்த சில நாட்களாக, முதல்வரும் பிரபல நடிகருமான Vijay மற்றும் அவரது மகன் Jason Sanjay இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஜேசன் சஞ்சய் ஒரு குழந்தையுடன் உரையாடும் போது தனது தந்தை விஜய் குறித்து ஒரு நெகிழ்ச்சியான சிறுவயது நினைவைக் பகிர்ந்து கொள்கிறார்.
அதில், பள்ளி முடிந்து வெளியே வந்த சஞ்சய்யை, விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் மகிழ்ச்சியில் தூக்கி தோளில் வைத்துக் கொண்ட சம்பவம் இடம்பெறுகிறது. அப்போது பயந்துபோன சிறுவன், தன்னை யாரோ கடத்த முயற்சிக்கிறார்கள் என நினைத்து அழுததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அங்கு வந்த விஜய், மகனை பாதுகாப்பாக காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை அந்த ரசிகரே மீண்டும் நினைவுகூர, ஜேசன் சஞ்சய் அதை ஒரு பேச்சுவார்த்தையில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முன்னதாக, சமூக வலைதளங்களில் குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டதாகவும், பெயர் இனிஷியல் மாற்றம் உள்ளிட்ட உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் பரவி வந்தன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ, தந்தை–மகன் உறவு உறுதியானதாக இருப்பதை காட்டும் வகையில் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ஜேசன் சஞ்சய் தற்போது ‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் வருகிற 31-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

