Tamilstar
Health

தர்பூசணி பழத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா.. இதுதான் காரணம்?

Watermelon should not be eaten in the fridge .. Do you know why .. Is this the reason

தர்பூசணி பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஏன் நல்லது அல்ல என்று பார்க்கலாம் வாங்க..

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை தேடி விரும்பி சாப்பிடுவது அனைவரும் அறிந்ததே.. அதில் முக்கிய பங்கு வகிப்பது தர்பூசணி.. இந்த பழத்தில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. மேலும் புரதம் நார்ச்சத்து போன்ற பயனுள்ள சத்துக்கள் இருப்பதாலும் மக்கள் இதை அதிகம் விரும்புகின்றனர்.

தர்பூசணி பழத்தின் மேல் பகுதி கடினமாகவும் இருப்பதால் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும். தர்பூசணியை கூடுமான அளவு வெளியே வைத்து சாப்பிடுவது சிறந்தது.

மேலும் தர்பூசணி பழத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவதன் மூலம் அதன் ஊட்டச்சத்து குறைவு அதுமட்டுமில்லாமல் அதில் காணப்படும் கரோட்டினாய்டு அளவும் குறைவாகும்.

இதனால் நம் உடலுக்கு தேவைப்படும் ஆரோக்கியம் கிடைப்பதில்லை மேலும் நச்சுத் தன்மை வாய்ந்ததாகவும் ஆகிவிடுகிறது.

இதுமட்டுமில்லாமல் ஃபுட் பாய்சன் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தர்பூசணியை ஃப்ரெஷ்ஷாக வாங்கி சாப்பிட்டு உடலை ஆரோக்கியத்துடன் வாழ்வது சிறந்தது.