Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அக்‌ஷய் குமாரின் புதிய புகைப்படம்… கலாய்க்கும் நெட்டிசன்கள்

Akshay Kumar's new photo ... Art Netizens

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அக்‌ஷய் குமார் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சூரரைப் போற்று மாறன் மாதிரி இருக்கும்னு பாத்தா பிதாமகன் விக்ரம் மாதிரி இருக்கானே’ என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.