Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

9 வயதிலேயே 12 மொழிகள் தெரியும்… அசின் மகளின் திறமை!

Asin’s 9-Year-Old Daughter Can Speak 12 Languages

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அசின். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்ட இவர், தற்போது 9 வயது மகள் ஆரினுடன் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், தனது மகளின் திறமைகள் மற்றும் வளர்ப்பு குறித்து அசினின் கணவர் ராகுல் சர்மா பகிர்ந்துள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னால் இரண்டு மொழிகளைக்கூட சரியாகப் பேச முடியவில்லை. நாங்கள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளுடன் நின்றுவிட்டோம். ஆனால், எங்கள் மகள் ஆரின் சுமார் 12 மொழிகளைப் புரிந்துகொண்டு பேசுகிறார். அதில் கொரியன், ஜப்பானிய மற்றும் சீன மொழிகளும் அடங்கும்.

மகளின் வளர்ப்பில் அசின் முக்கியப் பங்கு வகிக்கிறார். அவருக்கு மொபைல் போன், தொலைக்காட்சி என எந்தவிதமான திரை நேரமும் வழங்கப்படுவதில்லை. தற்போது இரண்டாம் வகுப்பு படித்து வரும் ஆரினுக்காக, எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களைக்கூட வீட்டில் வைத்திருக்கிறார். மகளின் கல்வி மற்றும் வளர்ச்சியில் அசின் காட்டும் அக்கறையே இதற்குக் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் சர்மா பகிர்ந்துள்ள இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.