கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது திரைப்படம் ‘டோரதி’. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் இன்று (செப்.25) திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், ‘டோரதி’ திரைப்படத்தைப் பார்த்த தனுஷ், படக்குழுவினரை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “‘டோரதி’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஒரு தலைசிறந்த படைப்பு. துணிச்சலான, உணர்வுப்பூர்வமான படமாகவும், தீவிரமான கதைக்களத்துடனும் உருவாகியுள்ளது. ஒவ்வொரு நடிகரும் அற்புதமாக நடித்துள்ளனர். நமது இசை மேஸ்ட்ரோ இளையராஜா சாரின் பின்னணி இசை உங்களை மெய்மறக்கச் செய்யும். ‘இசைஞானி’ திரைப்படத்திலிருந்து ருத்ரதாண்டவம்” என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இன்று வெளியாகும் இப்படத்திற்கு என் அன்பு நண்பர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.
Dorothy – a masterpiece from @karthiksubbaraj
Bold and poignant. Raw and intense. Every actor has performed brilliantly. Our maestro ilayaraja sir’s background score will blow your mind away. Rudhrathandavam from isaignani. Best wishes to my dear friend Karthick subbaraj and…— Dhanush (@dhanushkraja) September 24, 2026

