Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சினிமாவில் அறிமுகமானபோது என் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது – நடிகை மமீதா பைஜூ

My Parents Were Worried When I Entered the Film Industry - Mamitha Baiju

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், தனது சினிமா பயணம் குறித்து மமீதா பைஜூ அளித்த பேட்டியில் கூறியதாவது:

“நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்பது தெரிந்ததும் என் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நான் எங்கே செல்கிறேன், எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து குடும்பத்திற்குள் பல்வேறு உரையாடல்கள் நடைபெற்றன.

நான் அறிமுகமே இல்லாத ஒரு துறைக்குள் நுழைந்திருந்தேன். சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. எனது ஆரம்ப கால சினிமா நாட்களை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அப்போது நான் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.

அது என் வாழ்க்கையில் மிகவும் சுவாரசியமான காலகட்டமாக இருந்தது. அதே நேரத்தில், சற்று மன அழுத்தமும் ஏராளமான சந்தேகங்களும் நிறைந்த காலமாகவும் இருந்தது. எனது தற்போதைய நிலையைவிட அந்தக் காலகட்டம்தான் என் நினைவில் அதிகமாக பதிந்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.