திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும் தற்போது சின்னத்திரையில் புதிய பயணத்தை தொடங்க உள்ளார்.
சமையல் தொடர்பான புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்டது.
இதுகுறித்து சமந்தா கூறுகையில், “இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் இதுவரை பங்கேற்றதில்லை. அதனால்தான் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் தவறுகள் மற்றும் ஒருவரையொருவர் ஆச்சரியப்படுத்தும் தருணங்களைப் பார்ப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களின் மற்றொரு பக்கத்தையும் ரசிகர்கள் பார்க்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

