Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துல்கர் சல்மானின் ‘I’M GAME’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

Dulquer Salmaan’s I’m Game New Release Date Announced

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I’M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொள்வதாகவும், தாமதத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், திரைப்படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தில் கயாடு லோகர், ஆண்டனி வர்கீஸ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், செப்டம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.