Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” – யுவன் சங்கர் ராஜா

I’m Extremely Happy to See the Love from Fans - Yuvan Shankar Raja

இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தை ஏற்கனவே முழுமையாக பார்த்துவிட்டதாகவும், படம் சிறப்பாகவும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய வகையிலும் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தொடங்கிய முழுமையான டிராக் லிஸ்ட் வெளியிடும் நடைமுறை இந்தப் படத்திலும் தொடர்வதாக கூறிய அவர், பாடல்கள் தொடர்ந்து வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், பாடல்களுக்கு ரசிகர்கள் அளித்து வரும் அனைத்து ரியாக்ஷன்களும் பாசிட்டிவாக இருப்பதாகவும், ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா கூறினார்.

இந்தப் படம் ஒரு சிறந்த என்டர்டெயினராகவும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படமாகவும் இருக்கும் என தெரிவித்த அவர், ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் தொடர்ந்து இடம்பெறும் வகையிலும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் வகையிலும் படம் அமைந்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் திருமண வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்ட இப்படம், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ளது. ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.