கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் வெளியிடப்படலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ‘அரசன்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்து பதிவு செய்துள்ளார்.
அதில், “‘அரசன்’ படத்தின் முக்கியமான காட்சிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது சிறிது ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெற்று அடுத்த கட்ட பணிகளுக்கு தயாராகும் நேரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இரவு பகலாக தொடர்ச்சியான படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், முக்கிய பகுதிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா ஜெரெமியா, அமீர், கிஷோர், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றி வருகிறார்.
That’s a wrap on one amazing big schedule for #Arasan 🌙🎬
Time to recharge, recover, see some daylight, and get ready for what comes next. #VetriMaaran @anirudhofficial @theVcreations pic.twitter.com/iAuzE5Nn1P
— Silambarasan TR (@SilambarasanTR_) June 26, 2026

