‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக புதிய பயணத்தை தொடங்கிய நடிகர் சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது ‘மண்டாடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தை எல்ரட் குமார் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
மேலும், சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹால், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டண்ட் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில், ‘மண்டாடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, சூரி நடிக்கும் ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


