‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!
ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையமைக்கிறார். ஆனால், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் உள்ளது.
இதனிடையே, ‘தாய் கிழவி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் சிபி சக்கரவர்த்தி. அப்போது பேசுகையில், ‘ரஜினி 173’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தின் இடையில் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இப்படத்தை ஒரே கட்டமாக முடித்து, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
’தலைவர்-173’ படத்தை முடித்துவிட்டு, கமலுடன் இணைந்து நடிக்கும் படம் தொடங்க திட்டமிட்டுள்ளார் ரஜினி. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்த படம் ஆக்சனுடன் நகைச்சுவை கலந்து உருவாகலாம் என கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் அடுத்த வெளியீடாக ‘ஜெயிலர் 2’ வருகிறது. தற்போது இதன் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


