Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘புருஷன்’ பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும்

'Purushan' movie plot directed by Sundar C, starring Vishal and Tamannaah

‘புருஷன்’ பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும்

நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது தெரிந்ததே. இச்சூழலில் உருவாகும் ‘புருஷன்’ பட தகவல்கள் பார்ப்போம்..

விஷால், சுந்தர்.சி கூட்டணியில் உருவான ‘மதகஜ ராஜா’ பட வெற்றியை தொடர்ந்து ‘புருஷன்’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது.

விஷால் இயக்கி வரும் ‘மகுடம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘புருஷன்’ படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியிருக்கிறார் விஷால். இதனை பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இப்படத்தில் விஷாலுடன் தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. முழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இது உருவாக இருக்கிறது.

’புருஷன்’ படத்தின் அறிமுக வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன் காட்சியமைப்புகளுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக கோபி அமர்நாத், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

'Purushan' movie plot directed by Sundar C, starring Vishal and Tamannaah
‘Purushan’ movie plot directed by Sundar C, starring Vishal and Tamannaah