Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல்

'Moonwalk' movie song sung by A.R. Rahman and danced by Prabhu Deva goes viral

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல்

பிரபுதேவா கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மூன்​வாக்’. இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்​ஸ்​லி, ராஜேந்​திரன், சுவாமி​நாதன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். மனோஜ் நிர்​மலாதரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு ஏ.ஆர்​.ரகுமான் இசையமைத்​துள்​ளார்.

பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்​தின் அனைத்து பாடல்​களை​யும் ஏ.ஆர்.ரகுமான் பாடி​யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்​படத்​தில் இருந்து வெளி​யான ‘ஏத்​து’ வீடியோ பாடல் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. அதில் பிரபுதேவா கடின​மான நடன அசைவு​களை எளி​தாக ஆடி ரசிக்க வைத்​துள்​ளார். இப்​பாடல் வெளி​யான 2 வாரங்​களி​லேயே யூடியூப்​பில் 11 மில்​லியன் பார்​வை​களைக் கடந்​துள்​ளது. இப்​பாடலுக்​கு, ஆப்பிரிக்​கா​வின் பிரபல​மான ‘ஹைபர்ஸ் கிட்ஸ் ஆப்பி​ரிக்​கா’ என்ற குழந்​தைகள் இசைக்​குழு, நடன​மாடி வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்​ளனர். இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரகுமான் அந்த நடனத்தை வரவேற்று பதிலளித்​துள்​ளார். அந்த வீடியோ இணை​யத்​தில் வைரலாகி வரு​கிறது.

'Moonwalk' movie song sung by A.R. Rahman and danced by Prabhu Deva goes viral
‘Moonwalk’ movie song sung by A.R. Rahman and danced by Prabhu Deva goes viral