Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட அருணாச்சலம்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

moondru mudichu serial episode update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் பூஜை ரூமில் வந்து பேப்பரை பிரித்துப் பார்க்க அதில் நந்தினி வரமாட்டாள் என எழுதி இருப்பதை பார்த்து சூர்யாவுக்கு போன் போட்டு சொல்லுகிறார். எனக்கு தான் தெரியும் டாடி தாய்க்குலம் இப்படித்தான் பண்ணுவாங்க என்று சொல்ல நந்தினி பத்தி ஏதாவது தெரிஞ்சுதா என்று அருணாச்சலம் கேட்க அப்போது கிட்னாபர் போன் பண்ண விஷயத்தையும் டிமாண்ட் வைத்திருக்கும் விஷயத்தையும் சொல்ல சரி காலையில தானே சொல்லி இருக்காங்க நீ இப்போதைக்கு வீட்டுக்கு வா என்று அருணாச்சலம் கூப்பிட சூர்யாவும் சரி என்று சொல்லுகிறார். மறுபக்கம் மெஹந்தி பங்க்ஷனுக்கு ஏற்பாடுகள் வீட்டில் பிரமாண்டமாக நடக்க சூர்யா வீட்டுக்கு வருகிறார். சுந்தரவல்லி அருணாச்சலத்தை பக்கத்தில் வந்து உட்கார சொல்லுகிறார். மெஹந்தி போட சுந்தரவல்லிக்கு டிசைன் பார்க்க சொல்ல என் பசங்க தான் சந்தோஷமா செய்றாங்க அவங்க பார்த்து சொல்ற டிசைன் போட்டுகிறேன் என்று சொல்ல சுரேகா நான் பார்க்கிறேன் என்று சொல்ல இல்ல என் பையனுக்கு தான் எனக்கு எது வெச்ச அழகா இருக்குன்னு தெரியும் அவன்கிட்ட போய் காட்டுங்க என்று சொல்லுகிறார். சூர்யா கோபமாக சென்றுவிட சரி டிஸ்டர்பா இருக்கான் என் பொண்ணுங்க செலக்ட் பண்ணட்டும் என்று சொல்ல மாதவி சுரேகா இருவரும் டிசைன் தேர்வு செய்து கொடுக்கின்றனர். மறுபக்கம் சூர்யா நந்தினியை நினைத்து வருத்தப்பட சுந்தரவல்லிக்கு மருதாணி வைத்து முடிக்கின்றனர். உடனே அருணாச்சலம் மற்றும் சுந்தரவல்லி உடன் சேர்ந்து வந்திருப்பவர்கள் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். மறுபக்கம் நந்தினி அனைவரும் தூங்கிவிட தப்பிக்க முயற்சி செய்கிறார். வந்திருக்கும் கெஸ்ட் உங்க உங்க மகனும் மருமகளும் எங்கே என்று கேட்ப மகன் ஓகே எனக்கு மருமகன் யாரும் கிடையாது என்று சொல்லிவிட்டு கல்யாணத்திடம் சொல்லி சூரியாவை அழைத்து வரச் சொல்லுகிறார்.

நந்தினி அங்கு உடைந்திருக்கும் பாட்டில் ஒன்றில் கயிறை அறுத்துவிட்டு தப்பி ஓடுகிறார். அருணாச்சலம் கூப்பிட்டதால் சூர்யா வேறு வழி இல்லாமல் கீழே இறங்கி வர, சுந்தரவல்லி வாடா ஃபேமிலி போட்டோ எடுத்துக்கலாம் என்று கூப்பிடுகிறார். சூர்யா போட்டோகாரரிடம் நான் போய் நிற்கிறேன் நீ எடுக்கும்போது சிக்னல் கொடு நான் விலகிடுவேன் என்று சொல்லுகிறார் அதேபோல் போட்டோகாரரும் சூர்யா இல்லாமல் போட்டோவை எடுத்து விடுகிறார். மறுபக்கம் நந்தினியும் அவர்களிடம் மாட்டிக்கொள்ள வீட்டுக்கு வந்த கெஸ்ட் அனைவரும் சாப்பிட்டுவிட்டு கிளம்ப சுந்தரவல்லி வழி அனுப்பி வைக்கிறார். பிறகு வாங்க நம்ம சாப்பிடலாம் என்று போக, நந்தினியை அழைத்து வந்தவர்கள் கவரை முகத்தில் மூடி மூச்சு திணற வைக்கின்றனர். உன்ன வெச்சி இன்னும் எவ்வளவு விஷயம் சாதிக்க வேண்டிய இருக்கு உன் புருஷன் எதிரில் உன்னை சித்திரவதை பண்ணி இதைவிட கொடூரமா சாகடிப்போம் என்று சொல்லுகின்றனர். சூர்யா வந்தானா என்று கல்யாணத்திடம் கேட்க அவர் சாப்பிட கூப்பிட்டேன் பசிக்கலன்னு சொல்லிட்டார் என்று சொல்ல அருணாச்சலமும் எனக்கும் பசி இல்லை நீங்க போய் சாப்பிடுங்க என்று சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் சூர்யா அவர்கள் சொன்னது போல் ரோட்டில் நிற்க, மறுபக்கம் நந்தினி நான் இங்கிருந்து எப்படியாவது தப்பிக்கணும் நான் சாகமாட்டேன் சூர்யா சார் வருத்தப்படுற மாதிரி எதுவும் நடக்காது என்று சொல்ல, அவர்கள் சொன்னது போல் 33 நம்பர் ஆட்டோ வருகிறது அந்த ஆட்டோவை நிறுத்தி சூர்யா இந்த ஆட்டோவில் தான் போக வேண்டும் என்று சொல்ல அது சவாரி இருக்கிறது என்று ஆட்டோ கார் சொல்லுகிறார் அவரிடம் காசு கொடுத்து சூர்யா சமாளித்து விட பிறகு அந்த ஆட்டோவில் ஏறி செல்கிறார். கல்யாண நாள் ஏற்பாடுகளும் கோலாகலமாக நடக்க சுந்தரவல்லி அழகாக ரெடியாகி வர அனைவரும் சுந்தரவல்லி கல்யாண பொண்ணு மாதிரி இருப்பதாக சொல்ல அருணாச்சலத்தை கூப்பிட்டு வர சொல்லுகின்றனர். மாதவி வந்து ரூமில் பார்க்க அருணாச்சலம் நார்மல் டிரஸ்ஸில் இருக்கிறார் நீங்க அம்மா உங்களுக்காக வாங்கி கொடுத்த இந்த ட்ரெஸ்ஸ போட்டுக்கோங்க என்று எடுத்து கொடுக்கிறார். வந்தவங்க எல்லாம் உங்கள கேட்க ஆரம்பிச்சிட்டாங்க கிளம்பி வாங்க என்று சொல்ல எதுக்கு என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க என்று கேட்கிறார். சூர்யா வராமல் எப்படி என்று கேட்க நீங்க சூர்யா வராதத்துக்காக இல்ல அந்த நந்தினி வராமல் இருப்பதற்காக தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார். நீங்க இப்ப வரலைனா அம்மாவுக்கு தான அசிங்கம் தயவுசெய்து வாங்க என்று சொல்லுகிறார்.

சூர்யா வருவான் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்குல்ல வாங்க என்று சொல்ல, எனக்கு சூர்யா வராமல் வர மனசு வரமாட்டேங்குது என்று சொல்ல மாதவியும் சுரேகாவும் மாறி மாறி அருணாச்சலத்திடம் பேசி அந்த டிரஸ்ஸை கொடுத்து சூர்யா மேல நம்பிக்கை இருந்தா இந்த டிரஸ் போட்டுக்கிட்டு வாங்க என்று சொன்னா அருணாச்சலம் யார் மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஆனால் சூர்யா கண்டிப்பா கேக் கட் பண்றதுக்கு முன்னாடி நந்தினி ஓட வருவார் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என்று சொல்லி டிரஸ்ஸை மாற்றி கொண்டு வரேன் என்று சொல்லி மாற்றிக் கொண்டு வந்து விடுகிறார். நந்தினி மீண்டும் தப்பிக்க முயற்சி செய்ய எதிரில் ஒரு நபர் வருகிறார் அவரிடம் எங்க போற தப்பிச்சு போக பாக்குறியா என்று கேட்க இல்லை நான் பாத்ரூம் போகணும் என்று சொல்ல அந்த நபர் பாத்ரூம் போக கை கட்டை அவிழ்த்துவிட்டு பாத்ரூமுக்கு போக சொல்லுகிறார். அந்த நபர் திரும்பி போன் பேசிக் கொண்டிருக்க பாத்ரூமில் இருந்த ஒரு கட்டையால் நந்தினி அவனை அடித்து விட்டு ஓடிவிடுகிறார். நந்தினி வெளியில் ஓடி வர பைக்கில் நந்தினி துரத்தி வருகின்றனர் மறுபக்கம் சூர்யா ஆட்டோவில் வருகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial episode update