தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மேன் ஸ்டார் திவாகர். இவருக்கு நடிப்பு மீது அதீத ஆசை இருந்து வருவதால் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு லட்சியம் எனக் கூறி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றின் என்னை ஹீரோவாக விடாமல் தடுக்க எல்லா வேலையும் பண்றாங்க எனக்கு எல்லா குவாலிட்டியும் தகுதியும் இருக்கு வேணும்னா நான் சிம்புவின் மன்மதன் படத்தில் வரும் “ரோஜா பூ மாதிரி காதலை வளர்த்தேன் அது குத்தி குத்தி” என வரும் டயலாக்கை பேசி காட்டுகிறார்.
இந்தப் படத்தின் டயலாக்கை தொடர்ந்து அடுத்ததாக வல்லவன் படத்தில் இருந்து சிம்பு ரீமா சென்னிடம் பேசும் டயலாக்காண “இனிமே நான் உன்ன லவ் பண்ணல” என்று நீண்ட வசனத்தை பேசி காட்டுகிறார். மேலும் எனக்கு த்ரிஷா மேடம் மாதிரி பொண்ணு வேண்டுமென்றும் சொல்லுகிறார் உடனே அதற்கு பத்திரிக்கையாளர்கள் இன்னும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகலை என்று சொல்ல அவங்கள விட நான் சின்ன பையன் இன்னும் சொல்லப்போனா என்னோட வயசு வேணுமே அதிகமா சொல்றாங்க என்னோட டேட் ஆப் பர்த் 1988 தான் என்று கூறியுள்ளார்
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


