Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘ஹீரோவா நடிக்க காரணம் ரஜினிகாந்த்’ வித் லவ் நிகழ்ச்சியில் அபிஷன் ஜீவிந்த்

'Rajinikanth is the reason I play the hero' on the show With Love, Abhishan Jeevind

‘ஹீரோவா நடிக்க காரணம் ரஜினிகாந்த்’ வித் லவ் நிகழ்ச்சியில் அபிஷன் ஜீவிந்த்

‘ஊக்குவிக்க ஆளிருந்தால், ஊக்கு விற்பவரும் தேக்கு விற்பார்’ என்பதுபோல ஓர் நிகழ்வு பார்ப்போம்.

சசிகுமார்-சிம்ரன் ஆகியோர் கணவன்-மனைவியாக நடித்து வெளியாகி வரவேற்பு பெற்றது ‘டூரிஸ்ட் பேமிலி’ படம். இப்படத்தை இயக்​கிய அபிஷன் ஜீவிந்த் தற்போது ‘வித் லவ்’ என்ற படத்​தில் ஹீரோ​வாக அறிமுகம் ஆகியுள்ளார்.

அனஸ்​வரா ராஜன் நாயகி​யாக நடித்​திருக்​கும் இப்​படத்​துக்கு ஷ்ரே​யாஸ் கிருஷ்ணா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். அறி​முக இயக்​குநர் மதன் இயக்​கி​யுள்ள இப்​படத்தை ஸயான் பிலிம்ஸ் சார்​பில் சவுந்தர்யா ரஜினி​காந்த், எம்​ஆர்பி என்​டர்​டெ​யின்​மென்ட் இணைந்து தயாரித்​துள்​ளது. பிப்ரவரி​ 6-ந்தேதி வெளி​யாக இருக்​கும் இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்​னை​யில் நடந்​தது.
அப்போது அபிஷந் ஜீவிந்த் தெரிவிக்கையில்,

‘என் நன்றி அனைத்தும் ரஜினி​காந்த் சாருக்​கே. நான் நடிக்​கலா​மா? என்ற சந்​தேகம் எனக்குள் இருந்த காலத்​தில், சூப்​பர் ஸ்டார் என்னை அவருடைய வீட்​டுக்கு அழைத்​தார். அப்​போது அவர், ‘நீ நடி கண்​ணா’ என்று சொன்​னார். அந்த வார்த்தையிலேயே என் எல்லா தயக்​க​மும் உடைந்துவிட்டது.

அன்​றே, ‘என்ன நடந்தாலும் இந்​தப் படத்தில் நான் நடிக்க வேண்​டும்’ என்று முடிவு செய்​தேன். இயக்​குநர் மதனுக்கு நன்​றி. ’ டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்​குப் பிறகு எனக்கு நிறைய மரியாதை கிடைத்​தது. ஆனால் இந்த படம் வெளியான பிறகு, மதனுக்கு அதை​விட இரட்​டிப்பு மரியாதை கிடைக்​கும். இப்​படத்தில் மற்ற அனைவருமே சூப்​ப​ராக நடித்​துள்​ளனர்’ என்றார். படக்​குழுவினர் கலந்​து​கொண்​டனர்.

'Rajinikanth is the reason I play the hero' on the show With Love, Abhishan Jeevind
‘Rajinikanth is the reason I play the hero’ on the show With Love, Abhishan Jeevind