அஜித்துடன் சிம்பு: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் FANS எதிர்பார்ப்பு !
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய வெளியான ‘விடாமுயற்சி’ பாணியில் இதோ ஓர் கதைக்களம். ஆனால், இது வேற லெவல்.!
அதாவது, கார் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எஃப் 1 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிராட் பிட்டின் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்துவிட்டது.
இந்நிலையில், கார் பந்தயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் எஃப் 1 படத்தின் ரீமேக்கில் நடித்தால் அற்புதமாக இருக்கும் என ரசிகர்களின் கருத்தாக தொடர்கிறது. அப்படியொரு படம் வர வாய்ப்பு இருப்பதாக அஜித்தும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எஃப் 1 கதையை மையமாக வைத்து ஒரு ஸ்க்ரிப்ட் தயாரிக்குமாறு இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் கூறியிருக்கிறார் அஜித். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் எஃப் 1 ரீமேக்கை விஷ்ணுவர்தன் இயக்கப் போகிறார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
அஜித் தற்போது மலேசியாவில் இருக்கிறார். கார் பந்தயங்களில் கலந்துகொள்ள அங்கு சென்றிருக்கிறார். அஜித் குமார் அணி கலந்து கொண்ட கார் பந்தய அரங்கில் இயக்குநர் சிவாவை பார்த்த ஏ.கே. ரசிகர்கள், இதுவரை நீங்கள் சிவா இயக்கத்தில் நடித்ததே போதும் என்றார்கள்.
அஜித் குமாரின் அடுத்த படத்தை சிவா இயக்கவில்லை. அஜித் குமார் ரேஸிங் அணி மற்றும் அவர் நடிக்கும் இரண்டு விளம்பர படங்களை இயக்கவே சிவா மலேசியாவுக்கு சென்றிருக்கிறார்.
இதற்கிடையே அஜித் குமாருக்காக மலேசியாவுக்கு சென்ற சிம்புவும், அவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகிவிட்டது. அதைப் பார்த்த சினிமா ரசிகர்களோ, எஃப் 1 படத்தில் சிம்புவை நடிக்க வைக்கவும் அன்புக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சும்மா தெறிக்கும்ல.!


