தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
மூன்று முடிச்சு சீரியலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலும் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி குடும்பத்தினர் திருவிழாவில் கலந்து கொள்ள காரில் வருகின்றனர். சூர்யா ஊர் எப்படி இருக்கு நந்தினி என்று சொன்னால் எங்கள் கிராமத்துக்கு வந்த மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் இவர்கள் தெரிந்தவர்களின் வீட்டுக்கு வந்து இறங்க, வீட்டிலிருந்து ஒரு பெரியவர் மற்றும் ஒரு சின்ன பெண் குழந்தை வருகிறது. அவர்களிடம் விஷயத்தை சொல்லிவிட்டு இவர்கள் உள்ளே தங்கச் செல்கின்றன. உடனே பின்னாலேயே ஆதிரை குடும்பத்துடன் வந்து ஆட்டோவில் இறங்கி உள்ளே வந்து பெரியவரை கூப்பிடுகின்றனர்.
அவரிடம் திருவிழாவுக்கு தங்க ரூம் கேட்டு வந்திருக்காங்கன்னு சொன்ன இப்பதான் ஒருத்தவங்க இந்த பங்களா புல்லா வாடகைக்கு எடுத்துட்டாங்க அவங்க ஏதாவது மனசு வைத்தால் தான் என்று சொல்ல சரி பேசுறேன் என போக அருணாச்சலம் வருகிறார். உடனே ஆதிரை நாங்களே கேட்கிறோம் ஐயா என்று சொல்லி அருணாச்சலத்திடம் அப்பா எங்களுக்கு ஒரு உதவி பண்ணுங்க ரெண்டு ரூம் மட்டும் கொடுங்க நாங்க தங்கிக்கிறோம் என்று சொல்ல, அருணாச்சலம் வீட்ல இருக்குறவங்க கம்பேர்ட்டபிளா இருக்கணும்ன்னு தான் நாங்க ஃபுல்லா வாடகை எடுத்தோம் எனக்கு புரியுதுபா, எங்கேயும் வெளியே தங்க முடியாதுன்னு போனது குடும்பமா வந்திருக்கும் என்று சொல்ல, அருணாச்சலம் நான் வீட்ல பேசிக்கிறேன் நீங்க தங்கிக்கோங்க என்று சொல்ல, உடனே பிரபு எவ்வளவு வாடகை என்று கேட்க அருணாச்சலம் அது எல்லாம் வேண்டாம் என சொல்லியும் வாடகை பிரபு கொடுக்கிறார்.
பிறகு பிரபு குளிக்கப் போக, சூர்யா,ஆதிரை பிரபு ரூமுக்குள் வந்து சிகரெட் பிடிக்க பிரபு வெளியில் வந்து கோபப்படுகிறார். வெளியே போ என்று சொல்ல இந்த மொத்த பங்களாவையும் நான் வாடகைக்கு எடுத்து இருக்கேன் நீ வெளியே போ என்று பிரபுவை சொல்ல, ஒரு கட்டத்துக்கு மேல் இருவரும் சட்டையை பிடித்துக் கொண்டு சண்டை போட, அருணாச்சலம் வந்து தடுக்கிறார். எதுக்கு சூர்யா சண்டை போடுற என்று கேட்க, மொத்தம் ரெண்டு நாம் தானே எடுத்தோம் இவன் எதுக்கு வந்து இருக்கான் என்று சொல்ல நான் தான் ரூம் கொடுத்திருக்கேன் என்று சொல்ல இவனுக்கு எதுக்கு கொடுத்தீங்க வெளிய போக சொல்லுங்க என்று கோபப்படுகிறார். ஒருவழியாக அருணாச்சலம் சூர்யாவை சமாதானப்படுத்த, சூர்யா பிரபுவிற்கு வார்னிங் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் நந்தினி வெளியில் பூ கட்டி விட்டு உள்ளே வர பிரபு ஆதிரை வெளியில் வர நந்தினி கையில் தட்டில் இருக்கும் பூவைப் பார்த்து பூ வாங்கி கொடுக்க சொல்லு கேட்கிறார்.
பிரபு நந்தினியிடம் பூ என்ன விலை என்று கேட்க காசுலா வேண்டாம் எடுத்துக்கோங்க என்று சொல்லுகிறார். சும்மா எல்லாம் வேணாம் என்று சொல்ல நீங்க தப்பா நினைச்சுக்கிட்டீங்க அண்ணா என்று நந்தினி சொல்ல உடனே சூர்யா வருகிறார். இவன்தான் ஆதிரை என்கிட்ட காலைல பிரச்சினை பண்ணான் என்று சொல்லுகிறார். இவ யார் தெரியுமா என் வைஃப் நந்தினி அவகிட்ட போய் பர்ஸ் திருடுற ஆள் மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்பட ஆதிரை நந்தினிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆதிரையும், நந்தினியும் நட்பாக பேசிக்கொள்ள சூரியா பிரபுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்ல, நந்தினியிடம் பிரபு சாரி கேட்டுவிட்டு சூர்யாவிடம் செத்தாலும் உன்கிட்ட சாரி கேட்க மாட்டேன்டா என்று பிரபு சென்று விடுகிறார். சூர்யாவும் சென்றுவிட நந்தினி ஆதிரைக்கு பூ வைத்து விடுகிறார்.
சுந்தரவல்லி குடும்பத்தினருடன் திருவிழா நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். மறுபக்கம் பிரபு குடும்பமும் கோவிலுக்கு வருகின்றனர். அதேநேரம் வீடு வாடகை விட்ட பெரியவரும் அவர் பேத்தியும் போலீஸ் பாதுகாப்புடன் வருகின்றனர். பிறகு அனைவரும் சாமி கும்பிட வர பூசாரி பெரியவரை பெருமையாக பேசுகிறார். அவரும் எல்லாத்துக்கும் காரணம் அந்த குண்டத்து காளியம்மா தான் என்று சொல்லிவிட்டு அனைவரும் சாமி கும்பிடுகின்றனர். நந்தினி சூர்யா சார் இந்த ஊர்ல இருந்து போறதுக்குள்ள குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்துடனும் அதுக்காக நான் தீச்சட்டி எடுத்து தீக்குழி இறங்க போறேன் நீ தான் பார்த்துக்கணும் என்று வேண்டிக் கொள்கிறார். அருணாச்சலம் பெரியவரிடம் வந்து உங்களுக்கும் பாப்பாக்கும் எதுக்கு போலீஸ் பாதுகாப்பு என்று கேட்கிறார். எல்லாத்துக்கும் பின்னாடி ஒரு காரணம் இருக்கு. எல்லாரையும் காக்கிற கோயிலுக்கு பின்னாடி ஒரு ஃபேக்டரி இருக்கு என்று சொல்ல, அந்த நேரம் பார்த்து ஒருவர் சில ஆட்களுடன் ஃபேக்டரிக்குள் வந்து அங்கு அவரின் மகனின் புகைப்படத்தை பார்த்து நடந்ததை நினைத்துப் பார்க்கிறார்.
அப்போது சில ஆட்கள் ஃபேக்டரிக்குள் நுழைந்து அவரது மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுகின்றனர். இதனால் அந்த ஃபேக்டரி சீல் வைக்கப்பட்டதை நினைத்து இந்த ஊருக்கே நான் கொல்லி வைக்கிறேன் என்ற வில்லத்தனமாக பேசுகிறார். அந்த ஃபேக்டரில சாராயம் வியாபாரம் பண்ணாங்க அதை நான் தடுத்தேன் ஆனா எதுவும் பண்ண முடியல. அப்பதான் இந்த திருவிழா நடக்கும் போது அந்த சாராயத்தை குடிச்சு 50 பேர் இறந்துட்டாங்க, அதுக்கு மேல என்னால அமைதியாக இருக்க முடியாம அவங்க சாவுக்கு இந்த ஃபேக்டரி தான் காரணம் என்று கேஸ் கொடுத்தேன். இதனால அந்த ஆதிகேசவன் கோபப்பட்டான் என்று சொல்லுகிறார். ஆதிகேசவன் பெரியவரின் மகன் மருமகளை ஆக்சிடென்ட் பண்ணி சாக அடிச்சிட்டான் அதே மாதிரி என் பேத்தியையும் கொல்ல பாக்குறான், அதனாலதான் என் பேத்திக்கு பாதுகாப்பா இருக்காங்க என்று சொல்ல மறு பக்கம் ஆதி கேசவன் எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் அந்த ராஜா தம்பியோட பேத்திய தீர்த்து கட்டுவேன் என்று கோபமாக பேசுகிறார்.
இந்தத் திருவிழா நமக்கு சாதகமா இருக்க போகுது முதல்ல அம்பது பேர் தானே செத்தானுங்க இப்ப 100 பேர் சாகப் போறானுங்க இந்தத் திருவிழாவில் நடக்கப் போகிற சமபந்தி விருந்துல நம்ம சாராயத்தை குடிச்சிட்டு 100 பேராவது சாகணும், அது மட்டும் இல்லாம அந்தக் கிழவனோட பேத்திய ஃபேக்டரில எரிச்சு சாம்பலாக்கணும் அதுவரைக்கும் நான் இந்த ஃபேக்டரி விட்டு வெளியில் வரமாட்டேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் ஆட்டோவில் டான்ஸ் போட்டி நடக்கப் போவதாகவும் அதற்கு பரிசு ஐந்து சவரன் என்றும் சொல்ல இதை ஆதிரை நந்தினி கவனிக்கின்றனர். ஆதிரை இந்த டான்ஸ் போட்டியில கலந்துக்கிட்டு எப்படியாவது கனவு வீட்டுக்கு உதவி பண்ணலாம் என்று நினைக்க மறுபக்கம் நந்தினி எனக்கு மட்டும் டான்ஸ் ஆட தெரிந்திருந்தால் ஐந்து சவரம் ஜெயித்து சூர்யா சாருக்கு கொடுத்து இருக்கலாம் என்று சொல்லி புலம்ப சூர்யா வருகிறார்.
என்ன பேசிக்கிட்டு இருந்த என்று கேட்க, டான்ஸ் போட்டி நடக்கப் போகும் விஷயத்தை சூர்யாவிடம் சொல்ல, சூப்பர் நந்தினி நீ டான்ஸ் பண்ண சூப்பரா இருக்கும் என்று சொல்ல, நந்தினி எனக்கு டான்ஸ் ஆட தெரியாது என்று சொல்லுகிறார். ஆனால் சூர்யா உனக்கு நான் டான்ஸ் சொல்லித்தரேன் அந்த அஞ்சு பவுன் எனக்கு கொடுக்க வேண்டாம் நான் உனக்கு போட்டு விடுகிறேன் என்று சொல்லி ப்ராக்டிஸ்க்கு அழைத்துச் செல்கிறார். ஆதிரையும் பிரபுவிடம் டான்ஸ் பற்றி சொல்ல அதெல்லாம் வேண்டாம் என சொல்லி விடுகிறார். சூர்யா நந்தினி வேகமாக இழுத்துச் செல்ல அருணாச்சலம் எதுக்கு அப்படி இழுத்துட்டு போற என்று கேட்க அந்த நேரம் பார்த்து ராஜா தம்பி வர அவரிடம் டேன்ஸ் போட்டி கலந்து கொள்வதற்கு எப்படி பதிவு பண்ண வேண்டும் என்று கேட்கிறார். இதை பிரபு ஆதிரை கவனிக்க இவனே டான்ஸ் ஆட போறானா நம்பளும் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்தப் போட்டியில் ஜெயிச்சு அவன் மூஞ்சில கரிய பூசணும் என்று ஆதிரையிடம் சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் ராஜா தம்பியின் பேத்திக்கு ஆதிரை மருதாணி வைத்துவிட மறுபக்கம் சுந்தரவல்லி ஊருக்கு கிளம்ப சூர்யா நந்தினி டான்ஸ் ஆடி ஜெயிக்க போறதே இவங்களுக்கு பிடிக்கல அதுக்கு தான் போறாங்க என்று சொல்லுகிறார்.
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பிரபு எங்க ஃபேமிலிக்கு தனியா சாப்பாடு குடுங்க என்று சொல்ல இவர் பைவ் ஸ்டார் ஹோட்டல ரூம் போட்டு இருக்காரு என்று சொல்லுகிறார். ஆதி கேசவன் ஆட்கள் ராஜா தம்பியின் பேத்தியை கொல்ல வருகின்றன. என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


