Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாதவி செய்த வேலை, கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 16-05-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து முதலாளி ஆக போறீங்க என்று கேட்க நந்தினி ஏன் நாங்க முதலாளி ஆக கூடாத சார் என்று கேட்க நீங்கதான் முதலாளி ஆகணும் என்று சொல்ல அதெல்லாம் எங்களுக்கு வேணா சார் என்று நந்தினி சொல்லுகிறார். லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிற அளவுக்கு உயர்ந்து பெரிய ஆள் ஆகணும் என்று சொல்ல அப்படி நடந்தா நான் தான் கல்லாவில் உட்காருவேன் என்று விவேக் சொல்லுகிறார். இவங்க கிட்ட பேசினா வேலை ஆகாது நம்ம வேகவேகமா செய்யலாம் என்று விஜியும் நந்தினியும் வேலை பார்க்க சூர்யாவும் விவேக் காய்கறிகளை நறுக்குகின்றனர்.நந்தினி ஒரு பக்கம் இடியாப்பம் புழிய விஜி ஒரு பக்கம் இட்லி ஊத்திவைக்க சூர்யா மற்றும் விவேக் இருவரும் கைத்தட்டி சூப்பர் என சொல்லுகின்றனர். உடனே விவேக் சூர்யாவிடம் அவங்க வேலை ஆரம்பிச்சிட்டாங்க நம்ம நம்ம வேற ஆரம்பிக்கலாமா என்று கேட்க சூர்யா சூப்பர் என்று சொல்லி கிளம்ப விஜி இருவரையும் நிறுத்துகிறார். நாங்க இங்க கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறோம் நீங்க குடிக்க போறீங்களா? இங்க ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க என்று சொல்ல இருவரும் கோரசாக எங்களுக்கு தான் இந்த வேலை தெரியாதே என்று சொல்லுகின்றனர். நந்தினி தெரிஞ்ச வரைக்கும் செய்யுங்க சார் என்று சூர்யாவை கூப்பிட்டு இடியாப்பம் செய்ய சொல்ல விஜி விவேக்கை வேலை வாங்குகிறார். நந்தினி இடியாப்பம் செய்வதை பார்த்து சூர்யா செய்ய அவருக்கு செய்யத் தெரியாமல் இருக்க நந்தினியும் சூர்யாவும் சேர்ந்து இடியாப்பம் புழிகின்றனர். பிறகு சமைத்த உணவுகளை நால்வரும் சேர்ந்து பேக் பண்ணுகின்றனர்.

பிறகு 450 இட்லி 50 செட் இடியாப்பம் என எல்லாம் ரெடி ஆயிடுச்சு என்று நந்தினி சொல்ல, விஜியும் சூப்பர் நந்தினி என்று சொல்லுகிறார். பேக்கிங்கை முடித்துவிட்டு நந்தினி சூர்யாவுக்கு இலையில் சாப்பாடு வைத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்று சொல்ல இருவரும் சூப்பராக இருக்கு என்று சொல்ல பிறகு வண்டியில் சாப்பாடு ஏற்றுகின்றனர். மறுபக்கம் சுரேகா நந்தினி எங்கே என கேட்க, பீரோவில் வைத்து பூட்டி வச்சிருக்கேன் என சுந்தரவல்லி சொல்ல நான் துணியை துவைக்கணும் அதனால நந்தினி தேடுறேன் என சொல்ல ஏன் நந்தினி தான் செய்யணுமா வேற ஆளே இல்லையா என்று கேட்கிறார். ஆமாண்டி அவகிட்ட எந்த வேலையும் சொல்லாதீங்க அவ இடியாப்பம் பிழிய போய் இருக்கா என்று சொல்ல என்னம்மா சொல்றீங்க என்று கேட்க சுந்தரவல்லி நடந்த விஷயங்களை மாதவி இடம் சொல்லுகிறார்.

உடனே சுரேகா அவ சாதாரண நாளில் மதிக்க மாட்டா இப்ப இதுல வேலை வேறயா என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஆபீஸிலிருந்து வந்து சூர்யா சாரோட கையெழுத்து தேவைப்படுது சீக்கிரம் சைன் பண்ணல என்றால் சிக்கல் ஆயிடும் என்று சொல்ல சுந்தரவல்லி கோபப்படுகிறார். இந்த கான்ட்ராக்ட் மட்டும் நம்ம கையை விட்டு போனா 7 கோடி போயிடும் என்று சொல்லுகிறார். போன கூட எடுக்காம அப்படி என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் வேலைய வரும்போது செய்யணும் தோணும்போது வேலை வராது என்று டென்ஷனாக பேச, மறுபக்கம் சூர்யா இந்த பிசினஸ் மட்டும் போதுமா என்று கேட்க நந்தினி என்ன சார் இப்படி சொல்றீங்க ஒரு நாளைக்கு மூணு கோடி இட்லியாவது விப்பாங்க இதுல ஒரு பர்சன்டேஜ் அளவுக்காவது நம்ம புடிச்சிட்டாலே நம்ம பிசினஸ் எவ்வளவு முன்னேற்றிட்டு போயிடலாம் என்று சொல்ல நந்தினியை சூர்யா பாராட்டுகிறார். எனக்கு இன்னொரு கேள்வி இருக்கு நந்தினி எல்லாரும் இட்லி செய்றாங்க அப்ப உங்களுடைய இட்லியை மட்டும் வாங்கணும்னு என்ன என்று கேட்க தரதுனால தான் என்று சொல்லுகிறார். தரம் ருசி ரெண்டும் தான் முக்கியம் என்று சொல்லுகிறார்.

சூர்யா நந்தினியை பாராட்டிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் போன் போட்டு உன்கிட்ட ஒரு வேலை சொன்னால் செய்ய மாட்டியா ஹார்பர்ல பொருள் இருக்கு தெரியும்ல என்று சொன்னால் தெரியும் டாடி என்று சொல்ல தெரிஞ்சுகிட்டே சால்வ் பண்ணாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கே என்று கேட்கிறார். இதுல விளையாட்டா இருக்கணும் சீரியாசா சார் இருக்கணும்னு தெரியாதா என்று கேட்க, சரி டாடி நான் பாத்துக்குறேன் என்று சொல்ல, மேனேஜர் போன் பண்ணா ஏன் எடுக்கல இப்ப அவர் வீட்டுக்கே வந்து இருக்காரு என்று சொல்ல ஒன் மினிட் நான் அவங்களோட லைனுக்கு வரேன் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

அந்த மேனேஜருக்கு வீடியோ கால் செய்து உங்களோட பிரச்சனையை நான் சரி செய்கிறேன் அதுக்கு முன்னாடி என்னோட வைஃப் ஒரு புது பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க அதுக்காக கொஞ்சம் அலஞ்சிக்கிட்டு இருந்தேன் அதனாலதான் என்று சொல்லுகிறார். குக்கர் பிசினஸ் தவிர புதுசா ஏதாவது ஸ்டார்ட் பண்ண போறோமா என்று கேட்க இட்லி இடியாப்பம் செஞ்சு கொடுக்கப் போறோம் ஆறு கோடி பேர் பத்து கோடி இட்லி என்று சொல்லி சூர்யா அடுப்பு இட்லி பாத்திரம் இடியாப்பம் பாத்திரம் என எல்லாத்தையும் காட்டுகிறார்.

பிறகு சூர்யா நந்தினியையும் வீடியோ காலில் காட்டுகிறார். அந்த மேனேஜர் கங்கிராஜுலேசன் என்று சொல்லி பிசினஸ்க்கு வாழ்த்து சொல்லுகிறார். பிறகு நீங்க ஆபீஸ்க்கு போங்க நான் வந்து சைன் பண்றேன்னு சொல்லி போனை வைக்க சுந்தரவல்லி கோபமாக சென்று விடுகிறார். நீ இங்கே இரு நந்தினி நான் ஆபீஸில் முக்கியமான வேலை இருக்கு போயிட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன் என்று சொல்லி கிளம்ப காலையிலேயே இதே மாதிரி தான் பண்ணாரு இப்போயும் இதே மாதிரி தான் பண்ணிக்கிட்டு இருக்காரு வீட்டுக்கு போனா என்ன பிரச்சனையாகுமோ தெரியல என்று நந்தினி நினைக்கிறார். இந்த வீட்ல என்ன நடக்குதுன்னே தெரியல மொத்தமா தோட்டக்காரி பக்கம் சாஞ்சுட்டான் என்று சொல்ல மாதவி சூரியா பிரச்சனை இல்ல அவ அவ்வளவு சொல்லி மயக்கி வச்சிருக்கா என்று சொல்ல,சுந்தரவல்லி நான் சொல்றத தெளிவா கேளுங்க நாளைக்கு நானும் உங்க அப்பாவும் கல்யாணத்துக்கு போறோம் வர லேட் ஆகும் சூர்யாவோ ஆபிஸ்ல வேலை இருக்கு லேட்டா வருவான் அதனால அவள வீட்டுக்குள்ளே விடக்கூடாது கேட்டை இழுத்து மூடுங்க அவ வெளியே நின்னு அசிங்கப்படட்டும் அப்பதான் புத்தி வரும் என்று என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி விஜியிடம் காலைல கிளம்பும்போதே பிரச்சனை பண்ணாரு திருப்பியும் அவர் கூட போய் ஜோடியா இறங்கினால் ரொம்ப விசேஷமா இருக்கும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி கேட்டில் நின்று கொண்டிருக்க பூட்டியிருப்பதால் சிங்காரம் திறக்க மாதவி மற்றும் சுரேகா அசோகன் மூவரும் வருகின்றனர்.

உடனே உன் வேலையை நீ பார்க்க வேண்டியதுதானே என்று மாதவி சிங்காரத்தை அறைய சூர்யா வந்து நிற்கிறார். நந்தினி வரும்போது கேட்டு தொறக்க கூடாது என்று உலக ஐடியாவை கொடுத்தது யாரு என்று சூர்யா கேட்க அசோகன் உங்க அம்மா தான் என்று சொல்லிவிடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 16-05-25