இயக்குநர் சுந்தர் சி-யின் அதிரடி நகைச்சுவை கலந்த கேங்க்ஸ்டர் திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தில் சுந்தர் சி மட்டுமல்லாமல், நகைச்சுவையின் நாயகன் வடிவேலு, கவர்ச்சி புயல் கேத்ரின் தெரசா, மற்றும் வாணி போஜன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியுள்ளது.
திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் வரை, இப்படத்தின் ஓடிடி உரிமையை எந்த நிறுவனம் கைப்பற்றப்போகிறது என்ற கேள்வி சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பல முன்னணி ஓடிடி தளங்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது திரையரங்குகளில் படம் வெளியானபோது வெளியான அறிவிப்பு அனைவரின் சந்தேகத்தையும் தீர்த்து வைத்துள்ளது.
ஆம், பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோ, கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளது. படத்தின் ஆரம்பத்திலேயே அமேசான் நிறுவனத்தின் லோகோவுடன் இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இருப்பினும், இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமை எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது, எந்த மாதிரியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த டீல் முடிந்தது போன்ற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் சி-யின் இயக்கத்தில், வடிவேலுவின் அட்டகாசமான நகைச்சுவையுடன் உருவாகியுள்ள இந்த கேங்க்ஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமல்லாமல், அமேசான் பிரைம் வீடியோவில் எப்போது வெளியாகும் என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த கூட்டணி மீண்டும் ஒருமுறை திரையிலும், டிஜிட்டல் தளத்திலும் பட்டையைக் கிளப்பும் என்று நம்பலாம்.


