Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியா கொடுத்த ஷாக். அதிர்ச்சியில் உறைந்த கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 23-02-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கோபி ஆபீஸ் போலயா என்று கேட்க கிளம்பனும் என்று சொல்ல ராதிகா சரி வாங்க உங்கள ஆபீஸ்ல டிராப் பண்ணிட்டு போறேன் என்று கூறுகிறார்.

கோபி அதெல்லாம் வேண்டாம் உனக்கு எதுக்கு சிரமம் நான் உன்ன இந்த ஆபீஸ்ல டிராப் பண்ணிட்டு போறேன் என்று சமாளித்து விடுகிறார். அதைத் தொடர்ந்து எழில் அமிர்தாவுக்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க அமிர்தா என்னை நீங்க வெறுத்து விடுவீர்கள் என்று பயந்துட்டேன் என்று சொல்ல எழில் என்னைக்கும் அப்படி செய்ய மாட்டேன். நாளுக்கு நாள் உன் மேல காதல் அதிகமாகி கொண்டு தான் இருக்கு என்று சொல்ல அமிர்தாவும் தனக்குள் இருக்கும் காதலை சொல்கிறார்.

அதன் பிறகு கோபி ரெஸ்டாரண்ட் வருகிறார். அங்கே தன்னுடைய நண்பர் சதீஷை சந்தித்து பேச பாக்கியாவும் பழனிச்சாமி சந்திக்க இதே ரெஸ்டாரன்ட் வருகிறார். சதீஷ் பாக்கிய பழனிச்சாமி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபியிடம் சொல்ல கோபியும் இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியா பழனிச்சாமிக்கு நன்றி சொல்ல அவர் எதுக்கு நன்றி எல்லாம் என்று சொல்லி அடுத்து ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிற வேலையை பாருங்க வாழ்க்கையில பிரச்சனைகள் வந்து விட்டதா இருக்கும் அதற்காக நம்முடைய லட்சியத்தை விட்டு விடக்கூடாது என்று அட்வைஸ் செய்து அங்கிருந்து கிளம்ப பாக்யாவும் வெளியே வருகிறார்.

பழனிச்சாமி சென்றது பாக்யாவை தடுத்து நிறுத்தும் கோபி என்ன லவ்வா என்று கேட்டு அசிங்கமாக பேச பாக்யா லவ்வா இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சனை என்று பதிலடி கொடுக்கிறார். உங்கள மாதிரி திருட்டு வேலை செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது நான் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாதான் செய்வேன்.

ஒருவேளை எனக்கு யாரையாவது பிடிச்சது கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சுன்னா கூட நான் வெளிப்படையாக தான் பண்ணுவேன் அதுவும் என் பிள்ளைங்க கிட்ட சொல்லி அவங்களுடைய முழு சம்மதத்தோடு தான் பண்ணுவேன் என்று சொல்லி இங்கிருந்து கிளம்பி வர கோபி அதிர்ச்சி அடைகிறார். லேம்ப் போஸ்ட கல்யாணம் பண்ணிடுவாளோ என்று கோபி புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 23-02-24
baakiyalakshmi serial episode update 23-02-24