Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை”: பிரதீப் வெளியேற்றத்திற்கு கவின் போட்ட பதிவு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக ரெட் கார்ட் கொடுத்து பிரதீப்பை வெளியேற்றுவதாக கமல் அறிவித்தார்.

கமலின் இந்த செயல் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. முதலில் கடத்தியமாக வார்னிங் கொடுத்து இருக்கலாம் அதை விட்டுவிட்டு இப்படி வெளியேற்றுவது சரியில்லை பிரதீப்பை காட்டிலும் விஷப்பாம்புகள் அதிகம் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றன கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கவின் பிரதீப்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற பாடலை ஒலிக்க விட்டு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சரியாக சொன்னீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதே சமயம் கமல் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக பிரதீப்பை பயன்படுத்திக் கொண்டார் எனவும் கூறி வருகின்றனர். மேலும் கவினின் இந்த பதிவுக்கு பாவனி ரெட்டி ஹாட்ரின் எமோஜியை கமெண்ட்டாக பதிவு செய்துள்ளார்.

Bigg Boss Kavin latest update
Bigg Boss Kavin latest update