Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் விக்ரமன் மீது போலீசார் வழக்கு பதிவு..! காரணம் என்ன தெரியுமா?

-police-registered-a-case-against-bb vikraman

“பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். இவர் மீது சென்னை பெருங்குடியை சேர்ந்தவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான பெண் ஒருவர் வடபழனி அனைத்து மகளிர் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதில், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான விக்ரமன் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் மொபைல் வாங்கினார்.

ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார்.இதுபற்றி விக்ரமனிடம் கேட்டபோது என்னை சாதி ரீதியாக பேசி துன்புறுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் விக்ரமன் மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.”,

police-registered-a-case-against-bb vikraman
police-registered-a-case-against-bb vikraman