Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கங்குவா ஷூட்டிங் குறித்து வெளியான தகவல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

kanguva-movie latest update

“நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் \”கங்குவா\” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தாய்லாந்தில் நடைபெறும் இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடிகர் சூர்யாவின் காட்சிகள் நவம்பர் மாதத்தில் முடிவடையும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.”,

kanguva-movie latest update
kanguva-movie latest update