தமிழ் சினிமாவில் நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா உட்பட பலரது நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகிய வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி.
ஒவ்வொரு நாளும் இந்தப் படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது. சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் வேட்டையாடி வருகிறது.
இந்த நிலையில் தற்போது வரை இத்திரைப்படம் ரூபாய் 75 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விஷால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


