கோலிவுடில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்களை இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் தளபதி விஜய் தனது பெற்றோர்களின் 50வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். அப்போது விஜய் அவரது தாய் ஷோபா உடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அது தற்போது ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.
#ThalapathyVijay celebrated the 50th anniversary of his parents.. ❤️#BloodySweet ???? pic.twitter.com/l19psBHpBx
— VCD (@VCDtweets) April 25, 2023

