கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சிறந்த பிரபல நடிகர்களுக்கான கணக்கெடுப்பை மாதம்தோறும் ஆர்மேக்ஸ் ஸ்டார் இந்தியா மீடியா நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனம் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தமிழ் சினிமாவில் டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி அப்பட்டியலில் கடந்த ஆண்டை தொடர்ந்து தற்போதும் முதலிடத்தை தளபதி விஜய் அவர்கள் தக்க வைத்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் சேதுபதி, கார்த்தி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றனர்.
Ormax Stars India Loves: Most popular male Tamil film stars (Jan 2023) #OrmaxSIL pic.twitter.com/vuuhBGsE6T
— Ormax Media (@OrmaxMedia) February 14, 2023

