தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து அடுத்து துணிவு என்ற திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க சமுத்திரகனி, சிபி சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மஞ்சு வாரியர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜிப்ரானுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். துணிவு படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை பாடி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் துணிவு படத்தில் நிறைய சர்ப்ரைஸ் காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thrilled to have sung for @GhibranOfficial !!! Happy to be part of a very interesting song in #Thunivu! Waiting for you all to hear it! ❤️#ajithkumar #AK #hvinoth pic.twitter.com/G934UX79sg
— Manju Warrier (@ManjuWarrier4) November 26, 2022

