மூளை பக்கவாதம் ஏற்பட காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
மூளை செல்கள் திடீர் இழப்பு மற்றும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாகவே பக்கவாதம் ஏற்படுகிறது. இப்படி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று தெளிவாக பார்க்கலாம்.
முதலாவதாக முக்கிய காரணமாக இருப்பது மது அருந்துவது. மது அதிகமாக அருந்தும் போது தமனிகள் தடிமனாக மாறி மூளை பக்கவாதம் ஏற்படுகிறது.
இரண்டாவது காரணம் உடற்பயிற்சி. உடற்பயிற்சி தினமும் 30 நிமிடமாவது செய்ய வேண்டும். அதுவே உடல்நலத்திற்கும் சிறந்தது.
மூன்றாவது காரணம் ஆரோக்கியமான உணவுகளை தவிர்ப்பதும் நேரம் கடந்து சாப்பிடுவதும் ஆகும். எனவே காய்கறி பழங்களை நாம் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நான்காவதாக மிக முக்கியமாக கருதப்படுவது புகைபிடித்தல். அதிகமாக புகைபிடிக்கும் போது அது பக்கவாத அபாயத்தை ஏற்படுத்திவிடும்.
எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உற்சாகமாக வாழலாம்.

