Tamilstar
Health

அதிகமாக உறங்குவதால் ஏற்படும் ஆபத்து..

Dangers of over sleeping

அதிக நேரம் உறங்குவது நம் உடலுக்கு தீங்கையே விளைவிக்கிறது.

பொதுவாக நாம் அன்றாட வாழ்வில் உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. அப்படி நாம் ஒரு நாளைக்கு அதிக நேரம் தூங்குவதாலும் கூடுதல் பிரச்சனை உருவாகிறது.

தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை மட்டுமே தூங்க வேண்டும். அப்படி 8 மணி நேரம் கழித்து அதிக நேரம் தூங்குபவர்களுக்கு பக்கவாதம் வர அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலும் 25 வயது உட்பட்டவர்கள் இதய செயலிழப்பு பிரச்சனையும் எதிர்கொண்டு இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அதேபோல் பகலில் 90 நிமிடங்களுக்கு மேலாக தூங்குபவர்களுக்கும் 25 சதவீதம் பக்கவாதம் வர வாய்ப்பு உள்ளது. பக்கவாதம் என்பது நீண்ட நேரம் தூங்குபவர்கள் மட்டுமில்லாமல் தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் 82% வர வாய்ப்புள்ளது.

மேலும் அதிக நேரம் தூங்குவது உடல் எடையை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது அதுவே பக்கவாதம் வரவும் வழி வகுக்கும். எனவே நாம் அன்றாட உண்ணும் உணவு பழக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பின்பற்றுவதன் மூலம் 80 சதவீதம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம் என்றும் நமக்கு ஏற்படும் ஆபத்தை தடுத்து விடலாம் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.