தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
வரும் ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய் தன்னுடைய நாற்பத்தி எட்டாவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதன் காரணமாக தற்போது சன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு விஜய்க்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இவர்கள் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
தளபதியின் நாளைய தீர்ப்பு முதல் மக்களின் இன்றைய தீர்ப்பு வரை ????♥️
Presenting you all the #ThalapathyBirthdaySpecialPoster ????
Advance birthday wishes to our dear most #Thalapathy @actorvijay Sir ????♥️ pic.twitter.com/c8sLsUptSy
— Seven Screen Studio (@7screenstudio) June 19, 2022

