yugi movie review
போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் பிரதாப் போத்தன், சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் ஆனந்தி மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். ஆனந்தியை அரசியல் அமைப்பு சார்பாக நட்டியும், பிரதாப் போத்தன் சார்பில் டிடெக்டிவ் ஏஜென்சியை சேர்ந்த நரேனும் தேடுகிறார்கள்.
இறுதியில் ஆனந்தியை யார் கண்டு பிடித்தார்கள்? ஆனந்தியை கடத்தியது யார்? பிரதாப் போத்தன் பிடிப்பட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கதிர், வித்தியாசமான நடிப்பை கொடுத்து கவர்ந்து இருக்கிறார். இவர் டிடெக்டிவ் ஏஜென்சி நரேனுடன் இணைந்து ஆனந்தியை தேடுகிறார். இவருடைய கதாபாத்திரத்தின் திருப்பம் எதிர்பார்த்திராத வகையில் திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள்.
நாயகியாக வரும் ஆனந்தி இரண்டாம் பாதியில் தன்னுடைய நடிப்பால் திரைக்கதையை தாங்கி பிடித்து இருக்கிறார். இவருடைய அழுத்தமான நடிப்பு பார்ப்பவர்களை நெகிழ வைத்து இருக்கிறது. டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நரேன், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சாமி கதாபாத்திரத்தில் வரும் நட்டி, பென்ஸ் காரில் அதிக நேரம் உலா வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் அமையவில்லை. தனக்கே உரிய பாணியில் அசத்தி இருக்கிறார் ஜான் விஜய். கொடுத்த வேலையை செய்து இருக்கிறார் ஆத்மியா. மற்றொரு கதாநாயகியாக வரும் பவித்ரா லட்சுமிக்கு வித்தியாசமான கதாபாத்திரம். ஆனால் பெரியதாக எடுபடவில்லை.
கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜாக் ஹாரிஸ். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை வேகமாக நகர்கிறது. அடுத்தடுத்து யூகிக்க முடியாத அளவுக்கு காட்சிகள் அமைத்து இருக்கிறார்கள். ஆனால், இறுதியில் திரைக்கதை செல்லும் வேகத்தில் சற்று குழப்பம் ஏற்படுகிறது. சொல்லவந்ததை சுருக்கமாக சொல்லி இருக்கலாம். கணவன் மனைவி பாசம், வாடகைதாய் விஷயம், முன்னணி நடிகர்களின் பவர் என திரைக்கதையில் பல விஷயங்களை இயக்குனர் சொல்லி இருக்கிறார்.
ரஞ்சின் ராஜ் இசையில் பாடல்களை ஒரு முறை கேட்டு ரசிக்கலாம். பின்னணி இசையை ஆங்காங்கே ரசிக்க முடிகிறது. புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் யூகி – யூகிப்பது கடினம்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…