Will you take an irregular film ... Samantha, the famous director
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வருகை தந்த விஜய்சேதுபதிக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து வரவேற்ற காட்சியும், விக்கியை கட்டிப்பிடித்து விஜய்சேதுபதி அன்பை பரிமாறிய வீடியோ காட்சியும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.
தற்போது சமந்தாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’சமந்தா முதல் நாள் படப்பிடிப்புக்கு தயாராக மேக்கப் போடும் காட்சிகள் உள்ளது. அப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து சமந்தாவை வரவேற்கும் போது ’ஒழுங்கா படம் எடுப்பீர்களா’ என்று விக்னேஷ் சிவனை கலாய்த்தார்.
அதற்கு சிரித்துக்கொண்டே விக்னேஷ் சிவன், ‘தெரியலை பார்ப்போம்’ என்று கூறிவிட்டு, ‘இன்னும் பத்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் ஆனா நீங்க பொறுமையா வாங்க’ என்று பதிலுக்கு கலாய்க்கும் காட்சிகள் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…