“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி நடித்துள்ளதுடன், தனது ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்தும் உள்ளார்.

இந்த தொடரில் மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், மேலும் சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ் மற்றும் வி.ஜே.பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடர் மார்ச் 27ஆம் தேதி JioHotstar ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, பிக் பாஸ் மூலம் பிரபலமான வி.ஜே.பார்வதி குறித்து சிரிப்பூட்டும் வகையில் பேசினார்.

“சிம்பு, சூர்யா மாதிரி அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கும்போது என்னை ‘பிக் பாஸ்’ செய்ய வைத்த Pradeep அவர்களுக்கு நன்றி. வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை… வாரா வாரம் ‘பாரு’விடம் பேசி சலிச்சுட்டேன்,” என கலாய்த்தார்.

அவர் மேலும், “வி.ஜே.பார்வதி மீது சிலருக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால் இந்த வெப் தொடரை பார்த்த பிறகு அவரை நீங்கள் கண்டிப்பாக விரும்புவீர்கள்,” என்றும் கூறினார்.

அதேபோல், முத்துக்குமார் நடித்த விதத்தையும் பாராட்டிய அவர், “அவர் ஒரு திறமையான நடிகர். அவரைகார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன் போன்ற இயக்குனர்களிடம் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி,” என்றும் தெரிவித்தார்.

இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த தொடரில் “லலிதா” என்ற கதாபாத்திரத்தில் வி.ஜே.பார்வதி நடித்துள்ளார்.

Suresh

Recent Posts

‘அரசன்’ முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…

41 minutes ago

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…

49 minutes ago

திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ்- வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…

54 minutes ago

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…

1 hour ago

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…

3 hours ago

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

23 hours ago