தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.நேற்று முன்தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.
அதேசமயம் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் தற்போது தொலைக்காட்சியில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகி மோத இருக்கிறது. அதாவது ஜனவரின் 4 தேதி ஒரே நாளில் ஒரே நேரத்தில் இந்த ஒளிபரப்புகள் இடம்பெற உள்ளதால் டிஆர்பிஇல் எது முந்தபோகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


