தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டு வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து லத்தி சார்ஜ் என்ற படத்தில் முருகானந்தம் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுனைனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்க ராணா புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் நடிகர் நந்தா மற்றும் நடிகர் ரமணா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். சாம் சி எஸ் படத்திற்கு இசையமைக்க பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் என் பி ஸ்ரீகாந்த் படத்தின் எடிட்டிங் பணிகளை கவனிக்க திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார். கண்ணன் என்பவர் கலை இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஆக்சன் காட்சிகளை படமாக்கும் போது ஏற்பட்ட விபத்தில் விஷாலுக்கு மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பிராக்ஷர் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஓய்வெடுப்பதற்காக கேரளா சென்றுள்ளார்.
மேலும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மார்ச் மாத முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது.
