கோலிவுட் திரை உலகை தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் லத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடித்து வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
இதில் விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி வரும் இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கியிருந்த நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சியின் போது பயங்கரமான விபத்து ஏற்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தது.
அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி இருந்த படகுழு தற்போது மார்க்க ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறி படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
& that’s a wrap with @iam_SJSuryah for #MarkAntony #MarkAntonyComingSoon@VishalKOfficial @selvaraghavan @Adhikravi @ministudiosllphttps://t.co/apuTrY8Pw5 pic.twitter.com/I3QBhzM25p
— Vishal Film Factory (@VffVishal) April 17, 2023