தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வரும் இவர் விஷால் மக்கள் இயக்கம், தேவி அறக்கட்டளை ஆகியவற்றின் மூலமாக தொடர்ந்து மக்களுக்கு உதவி வருகிறார்.
இந்த நிலையில் விஜயை போல புதிய கட்சி தொடங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதற்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது என தகவல் வெளியானது.
ஆனால் இது உண்மையில்லை. தொடர்ந்து விஷால் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு சேவை செய்து வருவேன் எனவும் இவை ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் உதவி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். என்றென்றும் மக்களுக்காக சேவை செய்வேன். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
அன்புடையீர் வணக்கம் pic.twitter.com/WBkGmwo2hu
— Vishal (@VishalKOfficial) February 7, 2024

