விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.சீரியல் மட்டும் இல்லாமல் இதில் பல நிகழ்ச்சிகளும் கேம் ஷோக்களும் நடத்தி மக்கள் மனதை கவர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சின்ன மருமகள். வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அக்டோபர் ஆறாம் தேதியிலிருந்து சின்ன மருமகள் சீரியல் இரவு 7:30க்கு ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
