சினிமாவில் களமிறங்கும் விஜய் மகன் சஞ்சய்.. வைரலாகும் தகவல்

கோலிவுட் திரை வட்டாரத்தில் ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து வம்சி படைபள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது மகனான ஜேசன் சஞ்சய் அவர்கள் சினிமாவில் நடிக்கவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு கூட ஜேசன் சஞ்சய் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படம் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி வைரலானது.

ஆனால் இது குறித்து எந்த அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகவில்லை. அதேபோல் தற்போது மீண்டும் ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் நடிப்பதற்காக நடிப்பு பயிற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறாராம். இதற்கு அப்பா விஜயும் சம்மதம் தெரிவித்துள்ளதால் ஜேசன் தற்போது முதல் கட்டமாக நடனப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.

அதற்காக நடன கலைஞர் அவரது வீட்டிற்கே வந்து கற்றுத் தருகிறாராம். இதனைத் தொடர்ந்து ஜேசன் வசனங்கள் உச்சரிக்கும் பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறாராம். கிட்டத்தட்ட 4 வருடங்களில் அவரைக் களமிறக்க ஏற்பாடு நடந்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. எனவே விரைவில் விஜயின் மகன் சினிமாவில் களமிறங்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


vijays-son-is-training-in-cinema
jothika lakshu

Recent Posts

Machakalli Lyrical Video

Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran

5 hours ago

சமூக வலைதளங்களில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…

6 hours ago

பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…

6 hours ago

ஜெயிலர் 2 சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…

6 hours ago

டோரதி மனதில் ஆழமாகப் பதிந்தது.. படக்குழுவை பாராட்டிய மாரி செல்வராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…

6 hours ago

சிபிராஜ் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம்.. ரசிகர்களிடம் ஆதரவு கேட்ட நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…

6 hours ago