Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக முடிவுக்கு வரும் இரண்டு சீரியல்கள்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

vijay tv end card to bharathi kannamma serial

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கு தள்ளிப் போய் உள்ளது. போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போவது யார் யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாகவே இருந்து வருகிறது.

வழக்கம் போல இந்த நிகழ்ச்சி இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அதோடு இதை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்குள் இரண்டு சீரியல்களையும் முடித்து வைக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆமாம் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தெரியவந்துள்ளது. அதோடு ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாகவும் தெரிகிறது. இந்த இரண்டு சீரியல்களும் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

vijay tv end card to bharathi kannamma serial
vijay tv end card to bharathi kannamma serial