Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் முன்னோட்டம் எப்போது தெரியுமா? வெளியான தகவல்

Vijay Television Awards Preview Show Update

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அதேப்போல் விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.

இவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வருடத்திற்கான விஜய் அவார்ட்ஸ் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இதன் முன்னோட்ட நிகழ்ச்சி வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு இதற்காக பல்வேறு ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த முறை விஜய் அவார்ட்ஸை வெல்ல போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Television Awards Preview Show Update
Vijay Television Awards Preview Show Update