ஒரே நாளில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 2 திரைப்படங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு, தற்போது தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் வாய்ப்பு குவிந்து வருகிறது. அவர் நடித்துள்ள ‘குட்டி ஸ்டோரி’ என்கிற ஆந்தாலஜி படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்த ஆந்தாலஜி படத்தை கவுதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதில் விஜய் சேதுபதி நடித்துள்ள பகுதியை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார்.

இந்நிலையில், அதே தினத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றொரு படமும் ரிலீசாக உள்ளது. அந்தப் படத்தின் பெயர் ‘உப்பென்னா’. தெலுங்கு படமான இதில் விஜய் சேதுபதி கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தை பிச்சிபாபு சனா இயக்கி உள்ளார்.

இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜும், நாயகியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Suresh

Recent Posts

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

1 hour ago

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…

6 hours ago

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா 'கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில்…

6 hours ago

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…

6 hours ago

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச்…

8 hours ago

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…

8 hours ago