ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச் சேர்ந்த ஹரிச்​சந்​திரா என்ற ஹாரி பாக்​ஸர் என்​பவர் ரூ.10 கோடி கேட்டு மிரட்​டல் விடுத்​திருந்​தார். ரன்​வீர் சிங்​கின் மானேஜரின் வாட்ஸ்​ ஆப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது.

இதுகுறித்து மும்பை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்​றனர்​. அந்த வாய்ஸ் மெசேஜை சரி​பார்ப்​ப​தற்​காகப் பஞ்சாப் மற்​றும் ஹரி​யானா போலீ​ஸாருக்கு அனுப்பி இருந்​தனர். அது ஹாரி பாக்​ஸர் குரல்​தான் என்​பதை அவர்​கள் உறு​திப்​படுத்​தினர்.

இந்​நிலை​யில் மும்பை போலீ​ஸார், ஹாரி பாக்​ஸருக்கு எதி​ராக, லுக் அவுட் நோட்​டீஸை அனுப்​பி​யுள்​ளனர். அனைத்து விமான நிலை​யங்​களுக்​கும் இந்த நோட்​டீஸ் அனுப்​பப்பட்​டு உள்​ள​தாகத் தெரி​கிறது.

பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய​தாகக் கைது செய்​யப்​பட்​டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குஜ​ராத் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அங்கிருந்த​படியே தனது கும்பல் மூலம் பல்​வேறு குற்​றச் செயல்​களில் அவர் ஈடு​பட்டு வரு​வ​தாகக் கூறப்படுகிறது.

சல்​மான் கான் வீட்​டில் துப்​பாக்​கி​யால் சுட்​டது, மகா​ராஷ்டிர முன்​னாள் அமைச்​சர் பாபா சித்​திக் கொல்​லப்​பட்​டது, இயக்​குநர் ரோஷித் ஷெட்டி வீட்​டில் துப்​பாக்​கி​யால் சுட்​டது உள்பட பல்​வேறு வழக்​கு​களில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பல் ஈடு​பட்​டுள்​ள​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டு உள்​ளது.

Lawrence gang threatens Ranveer Singh with Rs. 10 crore
dinesh kumar

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

1 day ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

1 day ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

1 day ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago