மீண்டும் நடிக்க வருகிறாரா முதலமைச்சர் விஜய்..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அரசியலில் முழுமையாகக் களமிறங்குவதற்கு முன்பே, எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படமே தனது கடைசிப் படம் என்று விஜய் அறிவித்திருந்தார். இதனால், அவரது திரைப்பயணம் முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில், விஜய் மீண்டும் கேமரா முன்பு தோன்றப்போவதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட உள்ள விளம்பரம் ஒன்றில் விஜய் நடிக்க இருப்பதாகவும், அந்த விளம்பரத்தை இயக்குநர் கவுதம் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த விளம்பரத்திற்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத் தொடக்கத்திலோ நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டதாக அறிவித்த விஜய், அரசு விளம்பரத்தின் மூலம் மீண்டும் கேமரா முன் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Suresh

Recent Posts

Ameera Official Teaser

Ameera Official Teaser | Senthamizhan Seeman | RK Suresh | Anu Sithara | MS Bhaskar

2 hours ago

‘ஓம்’ பட விழாவில் அரசியல் பேசினாரா தனுஷ்? ரசிகர்கள் மத்தியில் சொன்ன கருத்து!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

1 day ago

மீண்டும் சண்டியர் ஆக வருகிறார் கமல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

1 day ago

ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம்… தனுஷ் வெளியிட்ட உருக்கமான பதிவு!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

1 day ago

சீன் திரை விமர்சனம்

நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனத் தொடர்ந்து இரண்டு படங்கள்…

1 day ago

மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்

பெண் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் நயன்தாராவுக்கு அடிக்கடி விசித்திரமான கனவுகள் வருகின்றன. அந்தக் கனவுகளில் தோன்றும் அரக்கர்கள், மயிலாஞ்சி என்ற…

1 day ago