அரசன் படத்தில் நடிப்பது பற்றி முதல்முறையாக பேசிய விஜய் சேதுபதி

அரசன் படத்தில் நடிப்பது பற்றி முதல்முறையாக பேசிய விஜய் சேதுபதி

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி தெரிவிக்கையில், ‘வெற்றிமாறன் சார் கதை எழுதும்போது, இந்த கதாபாத்திரத்துக்கு உங்கள் ஞாபகம் வருகிறது’ என்றார். உங்கள் ஞாபகத்தில் நான் வருவதே சந்தோஷம் சார் எழுதுங்கள் என்றேன். அவர் ஒரு திறமையான இயக்குநர். அவருடைய அறிவும், அக்கறையும் ரொம்ப ஆழமாக இருக்கும்.

ஒருவருடன் பேசும்போதே நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றால், வேலை செய்யும்போது இன்னும் நிறைய கற்றுக் கொள்ள முடியும். வெற்றிமாறன் சாருடன் வேலை செய்வது என்பது சுகமான சந்தோஷம் தான். எத்தனை நாள் படப்பிடிப்பு என்பதெல்லாம் தெரியாது. அவர் கேட்டார், வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், ரஜினி நடிப்ப்பில் நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்-2’ படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

Vijay Sethupathi speaks for the first time about acting in the film Arasan
dinesh kumar

Recent Posts

ரவி கேட்ட கேள்வி, அதிர்ச்சியின் குடும்பத்தினர், வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

முத்து மீது பழி விழ, உச்சகட்ட கோபத்தில் ரவி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

4 hours ago

தனுஷ் 55 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த படக்குழு..!

தனுஷ் 55 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

4 hours ago

இன்ஸ்டாகிராமில் போட்ட வீடியோவால் சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு வந்த பிரச்சனை..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா…

8 hours ago

விஜயா கேட்ட கேள்வி, சுருதி கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும்…

8 hours ago

ஆனந்தி சொன்ன வார்த்தை, மகேஷ் விட்ட சவால், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

9 hours ago

பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..

பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…

1 day ago