Dhruv Vikram has signed a new film in the love story genre.
துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம்
துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் காண்போம்..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன்: காளமாடன்’ படம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
காதல் படமாக உருவாகும் இதனை இயக்கவுள்ளார் தீபக் ரெட்டி. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகிறது. இப்படத்தில் நாயகிகளாக ருக்மணி வசந்த் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதன் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரியவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
’பைசன்’ வெற்றிக்குப் பின்பு பல்வேறு கதைகள் கேட்டு வந்தார் துருவ் விக்ரம். ஆனால், தீபக் ரெட்டி கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே உடனே ஒப்பந்தமாகி இருக்கிறார். முன்னதாக, இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘கில்’ தென்னிந்திய ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதில் இருந்து துருவ் விக்ரம் விலகிவிட்டார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…