நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழில், மனுநீ​தி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில படங்களில் நடித்​தவர் தெலுங்கு நடிகை பிரதியுஷா. இவர், சித்​தார்த்தா ரெட்டி என்​பவரைக் காதலித்து வந்​தார். கடந்த 2002-ம் ஆண்டு பிப்​ரவரி 23-ந்தேதி இருவரும் விஷம் குடித்த நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டனர்.

மறு​நாள் பிர​தி​யுஷா மரணமடைந்​தார். சித்தார்த்தா ரெட்டி உயிர் பிழைத்​தார். அவர்​கள் அருந்​திய குளிர்​பானத்​தில் பூச்சிக்​கொல்லி கலந்திருந்​தது தெரிய​வந்​தது. இச்சம்பவம் அப்​போது பரபரப்​பாகப் பேசப்​பட்​டது.

பிர​தி​யுஷா​வின் தாய் சரோஜினி தேவி, இது வெறும் தற்கொலை அல்ல; கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை என்றும் அரசி​யல் செல்​வாக்கு உள்​ளவர்​கள் இதற்​குப் பின்னால் இருப்​ப​தாக​வும் குற்​றம் சாட்​டி​யிருந்​தார். இந்​தச் சம்​பவத்​தில் பிர​தி​யுஷாவை தற்​கொலைக்​குத் தூண்டியதாக சித்​தார்த் ரெட்டி மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இவ்​வழக்கை விசா​ரித்த சிபிஐ, சித்தார்த்தா ரெட்டி மீது குற்​றப் பத்​திரிகை தாக்கல் செய்தது.

அதனடிப்​படை​யில், கடந்த 2004-ம் ஆண்​டில் சித்​தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையை ஹைதரா​பாத் முதன்மை அமர்வு நீதி​மன்​றம் விதித்​தது. இத்தண்டனையை, 2011-ம் ஆண்டு உயர்​நீதி​மன்​றம் 2 ஆண்​டு​களாகக் குறைத்​ததுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்​தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சித்​தார்த் ரெட்​டி​யும் பிரதியுஷாவின் தாயார் சரோஜினி தேவி​யும் 2012-ம் ஆண்டு உச்ச நீதி​மன்​றத்தை அணுகினர்.14 ஆண்டு விசாரணைக்​குப் பிறகு உயர் நீதி​மன்​றத் தீர்ப்​பை, உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ளது.

அதன்​படி சித்​தார்த் ரெட்டி 4 வாரங்​களுக்​குள் சரணடைய வேண்​டும் என்​றும், தீர்ப்​பில் குறிப்​பிட்​டுள்ள அபராதத்தைச் செலுத்த வேண்​டும் எனவும் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ராஜேஷ் பிண்​டால் மற்​றும் மன்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு தீர்​ப்​பளித்​துள்​ளது.

Actress Pratyusha suicide case: Supreme Court makes sensational verdict
dinesh kumar

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

4 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

4 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

4 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

4 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

4 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

4 hours ago