இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.
எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படத்தை, தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தயாரிக்க உள்ளார்.
இந்த படம் குறித்து விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்ததில்லை. இதை நான் முத்தையா முரளிதரன் அவர்களிடம் கூட கூறினேன், அதற்கு அவர், இந்த படத்தில் நடிக்க சரியான தகுதி இதுதான் என சொன்னார்.
மேலும் இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க உள்ளதாகவும், ஆனால் அது சற்று கடினமாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…